தமிழ்நாடு

குடியாத்தம் அருகே முதியவர் மீது ஆட்டோ மோதி விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி!  

30th Nov 2022 11:52 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியோர் மீது ஆட்டோ மோதிச் சென்ற பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் பகுதியை சேர்ந்த நரேந்திரன் (61) கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டிலிருந்து  சாலையில் சென்று கொண்டிருந்த போது  அடையாளம் தெரியாத ஆட்டோ மோதி பலத்த காயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிக்க | மனித குலத்துக்கு பேராபத்தா? 48,500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ்! 

ADVERTISEMENT

அரசு மருத்துவர்கள் நரேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சுயநினைவின்றி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நரேந்திரனின் மகன் தினேஷ் பாபு குடியாத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது சாலையில் நடந்து சென்ற முதியவர் நரேந்திரனின் மீது அதிவேகத்தில் வந்த ஆட்டோ மோதிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க | திமுகவை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்: மு.க. ஸ்டாலின் ஆறுதல்

சிசிடிவி காட்சிகளை வைத்து குடியாத்தம் போலீசார் குடியாத்தம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT