தமிழ்நாடு

ஆட்டோ கட்டணம்: அரசு பதிலளிக்க உத்தரவு

30th Nov 2022 05:42 PM

ADVERTISEMENT

எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 அக்டோபருக்கு பின் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படவில்லை என வழக்குரைஞர் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுநர்கள் தாங்களாகவே உயர்த்தி வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! 100 நிறுவனங்கள் அறிவிப்பு

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதில் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT