தமிழ்நாடு

டிச.5-ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

30th Nov 2022 12:57 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் டிசம்பர் 5-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, 

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

டிசம்பர் 5-ம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. 

படிக்க: முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்: நடந்தது என்ன?

கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT