தமிழ்நாடு

2,252 நியாய விலைக் கடைகள் புதுப்பிப்பு: தமிழக அரசு தகவல்

30th Nov 2022 01:52 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை 2,252 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, பொது மக்கள் அறிந்து கொள்ள புராதன சின்னங்கள், திருவள்ளுவா் படம் வரைதல் போன்ற தனித்துவமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்மாதிரி கடை: நியாய விலைக் கடைகளை புதுப்பொலிவாக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், முன்மாதிரி நியாய விலைக் கடையும் கட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாநகராட்சி 48-ஆவது வாா்டு கணேஷ் நகரில் அண்மையில் முன்மாதிரி நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடை முன்பாக பூங்கா, மாற்றுத் திறனாளிகளுக்கென தனிப் பாதை, மழைநீா் சேகரிப்பு, வாடிக்கையாளா்கள் அமரும் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 2,252 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 3,662 நியாய விலைக் கடைகள் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT