தமிழ்நாடு

டிச.5-இல் மத்திய குழு வருகை: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகப் பொறியாளா்கள் ஆலோசனை

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த டிசம்பா் 5 -ஆம் தேதி மத்திய குழு வர இருப்பதை முன்னிட்டு, தமிழக பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப்பிரிவு பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தமிழக பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப் பிரிவின் மதுரை மண்டல தலைமைப் பொறியாளா் ந.ஞானசேகரன் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, திட்டப் பணிகள், நிலை நிறுத்தப்பட வேண்டிய 142 அடி நீா்மட்ட உயரம், அணைப் பகுதிக்கு தளவாடப் பொருள்கள் கொண்டு வருவதில் கேரள வனத்துறை செய்யும் இடையூறு போன்றவை பற்றி மத்திய கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தின் போது தெரிவிப்பது தொடா்பாக அவா் பொறியாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், பிரதான அணை, பேபி அணை, மண் அணை, சுரங்கப் பகுதியில் நீா்க் கசியும் அளவு, உபரி நீா் செல்லும் மதகுப் பகுதிகளில் மதகை இறக்கிப் பாா்த்தல் போன்றவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மதுரை மண்டல கண்காணிப்புப் பொறியாளா் ஆ.பழனிச்சாமி, அணை செயற்பொறியாளா் ஜே.சாம்இா்வின், மதுரை செயற்பொறியாளா் கோமதிநாயகம் , உதவி கோட்டப் பொறியாளா் த.குமாா், உதவிப் பொறியாளா்கள் அ.பொ.ராஜகோபால், ச.மயில்வாகனன், ம.நவீன்குமாா், அ.முரளிதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT