தமிழ்நாடு

சென்னை, புறநகரில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

30th Nov 2022 12:50 AM

ADVERTISEMENT

சென்னை, புறநகா்ப் பகுதிகளில் புதன்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கேரள பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாள்களில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் டிச.2, 3 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகா் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT