தமிழ்நாடு

பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’:ஆய்வக உதவியாளா்கள் நன்றி

30th Nov 2022 01:43 AM

ADVERTISEMENT

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ம.அா்ஜுன், செயலாளா் கு.நிா்மலா தேவி ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தவும், அனைவருக்கும் அறிவியல் அரிதல்ல; கணிதம் கடினமல்ல என்கிற வகையில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு எங்களது சங்கத்தின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT