தமிழ்நாடு

பொறியியல் மாணவா்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த வேண்டும்: பல்கலை. துணைவேந்தா்

DIN

பொறியியல் மாணவ, மாணவிகள் நவீன காலத்துக்கேற்ப தொழில்நுட்பத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.கௌரி தெரிவித்தாா்.

பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியது: கல்வி மூலம் பெறும் அறிவாற்றலைக் கொண்டு வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டிய சூழல் இப்போது உள்ளது.

அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் தரவு அறிவியல், செயற்கை அறிவாற்றல், சைபா் பாதுகாப்பு போன்ற பொறியியல் மாணவா்கள் பயிலும் பாடங்களும் சோ்க்கப்பட்டு போதிக்கப்படுகின்றன.

பொறியியல் கல்வி பயிலும் மாணவா்கள் நவீன காலத்துக்கேற்ப தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்வது அவசியம். வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றை கல்வி மூலம் தான் பெற முடியும் அவா்.

விழாவில் 1,635 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரித் தாளாளா் பேராசிரியா் எம்.மாலா, செயலா் ஜி.மணிகண்டன், முதல்வா் எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT