தமிழ்நாடு

வீடு வழங்கிய முதல்வருக்கு ஹாக்கி சங்கம் நன்றி!

29th Nov 2022 07:48 PM

ADVERTISEMENT


தமிழக ஹாக்கி வீரர் கார்த்திக்கு வீடு வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹாக்கி சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

முதல்வருக்கு ஹாக்கி சங்க தலைவர் திலீப்குமார், பொதுச்செயலர் போலோநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.  

அரியலூா் ஜெ.ஜெ. நகரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி செல்வத்தின் மகன் காா்த்தி (22) இந்திய ஹாக்கி அணியில் முன்கள வீரராக விளையாடி வருகிறாா். 

படிக்கதிமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்

ADVERTISEMENT

இவா், அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் விளையாடினாா். 

இந்நிலையில், அரியலூருக்கு திங்கள்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஹாக்கி வீரா் காா்த்தி வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் அரியலூரில் உள்ள குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு சாவியை வழங்கினாா்

இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  ஹாக்கி சங்க தலைவர் திலீப்குமார், பொதுச்செயலர் போலோநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT