தமிழ்நாடு

கரூர் நொய்யல் கால்வாயில் 40 நாள்களுக்கு நீர் திறக்க அரசாணை

29th Nov 2022 08:06 PM

ADVERTISEMENT


கரூர் நொய்யல் கால்வாயில் 40 நாள்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாயிலுள்ள பாசனப் பகுதிகளுக்கு டிசம்பர் 7 முதல் முதல் பிப்ரவரி 4 வரை 40 நாட்களுக்கு நீர் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

படிக்கவீடு வழங்கிய முதல்வருக்கு ஹாக்கி சங்கம் நன்றி!

இதன்மூலம் 276.480 மில்லியன் கன அடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்பிற்கு  தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT