தமிழ்நாடு

லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு

29th Nov 2022 04:57 PM

ADVERTISEMENT

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவிற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிஃப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கைசிறப்பு மற்றும் அறுவை சிகிச்சைச் துறை கட்டடத்திற்கு வருகை தந்தார்.

ஒவ்வொறு நிகழ்ச்சியாக துவக்கி வைத்துவிட்டு கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டுவிட்டு மூன்றாவது தளத்திலிருந்து தரைத் தளத்திற்கு லிஃப்டில் சென்றபோது எதிர்பாராத விதமாக லிஃப்டின் இயக்கம் தடைப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள், லிஃப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் லிஃப்டின் ஆபத்துக் கால கதவின் வழியே வெளியேறினர்.

ADVERTISEMENT

இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT