தமிழ்நாடு

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்

29th Nov 2022 05:38 PM

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடி சொத்துகள் சேர்த்ததாக 2015-ல் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இதையும் படிக்க | டிச. 1-ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் ரூபாய்!

இந்நிலையில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராக ஆ.ராசா உள்பட நான்கு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT