தமிழ்நாடு

நாகியம்பட்டி பள்ளியில் கலைத் திருவிழா பரிசளிப்பு

29th Nov 2022 04:14 PM

ADVERTISEMENT

 

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதற்குப் பள்ளித் தலைமையாசிரியர் இராமகிருஷ்ணன் தலைமை வகிதார். எஸ்எம்சி உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள்  போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்து நடத்தினர். 

நாகியம்பட்டி நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா திங்கள்கிழமை வரை நடைபெற்று நிறைவுற்றது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தம்மம்பட்டி நண்பர்கள் குழு சார்பாகப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

ADVERTISEMENT

படிக்க: காசாவில் 57 சதவீதம் பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு!

இதில் கலைத் திருவிழாவில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தம்மம்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் திருச்செல்வன், சண்முகம் ரஜினி ரசிகர் மன்ற கெங்கவல்லி செயலர் சண்முகம், 1வது வார்டு கவுன்சிலர் பெருமாள், அருள், தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT