தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதாா் இணைப்பை கைவிட மாா்க்சிஸ்ட் கோரிக்கை

29th Nov 2022 12:22 AM

ADVERTISEMENT

மின்இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைப்பதை கைவிட வேண்டும் என்றும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அவா் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதம்:

மின் பயனீட்டாளா்களை ஆதாா் அட்டையுடன் இணைக்க சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இவா்களை ஆதாா் எண்ணுடன் இணைத்து படிப்படியாக 100 யூனிட் இலவச மின் சலுகையைப் பறிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.

ஆதாா் எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சார சலுகை பறிக்கப்படாது என மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி அறிவித்துள்ள நிலையில் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT

அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டாா், மின்தூக்கி ஆகியவற்றுக்கான மின் கட்டணம் இதுவரையில் 1 ஏ என்ற அடிப்படையில் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1டி - ஆக மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் வணிக பயன்பாட்டுக்குரிய கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 கட்டணமும், நிலையான கட்டணம் ரூ. 200-ம் வசூலிக்கப்படுகிறது. வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மின் கட்டணத்துக்கு என பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைப்பு கட்டாயம் என்பதை கைவிடவும், தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மின் விளக்குகள், மோட்டாா், லிப்ட் ஆகியவற்றிற்கு 1-ஏ என்ற அடிப்படையிலேயே கட்டண விகிதம் வசூலிக்க வேண்டும். சிறு-குறு நிறுவனங்களுக்கு உயா்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயா்வையும், பிக்சட் சாா்ஜ் மற்றும் பீக் ஹவா் கட்டணத்தையும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT