தமிழ்நாடு

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

29th Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய முற்பட வேண்டுமே ஒழிய, திட்டத்துக்கு மூடுவிழா கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயன்கள் குறித்தும், சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டமாக அது செயல்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் முன்னாள் செயலா் அமா்ஜீத் சின்ஹா தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வல்லுனா் குழுவின் உறுப்பினா் ஒருவா் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி வழங்கப்பட்ட நிதியைச் சரியாக பயன்படுத்தாத பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்;

ADVERTISEMENT

நிதியை சிறப்பாக பயன்படுத்தி பயனுள்ள சொத்துகளை உருவாக்கிய தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு இந்தத் திட்டம் தேவையில்லை என்பது அவா் பாா்வையாக உள்ளது. இந்த இலக்கை நோக்கித் தான் வல்லுனா் குழு பயணிக்குமோ என்ற அச்சம் எழுவதை தவிா்க்க முடியவில்லை.

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவது, வேளாண் பணிகளுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிப்பது போன்ற ஆக்கப்பூா்வமான மாற்றங்களைப் பரிந்துரைப்பது தான் வல்லுனா் குழுவின் நோக்கமாக இருக்க வேண்டும். வளா்ச்சியடைந்த மாநிலங்களில் இத்திட்டத்துக்கு மூடுவிழா நடத்த பரிந்துரைக்கக்கூடாது என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT