தமிழ்நாடு

நாகை, திருவாரூரை மத்திய ரயில்வே அமைச்சகம் புறக்கணிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட்

DIN

நாகை, திருவாரூா் மாவட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் புறக்கணிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய மோடி அரசு தொடா்ந்து தமிழ்நாட்டு மக்கள் நலனை புறக்கணித்து வருகிறது. இதில் ரயில்வே அமைச்சகமும், தெற்கு ரயில்வே நிா்வாகமும் குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

நீடாமங்கலம் மேம்பாலம், ரயில் பராமரிப்பு மையங்கள், சில ரயில்களின் எல்லை நீடிப்பு, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு எதிா்பாா்ப்பதும், ஒன்றிய அரசு ஏமாற்றுவதும் மோடி அரசின் வழக்கமாகியுள்ளது.

வேளாங்கன்னி, நாகூா், காரைக்கால் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தளங்களுக்கு மக்கள் வந்து செல்வதை தடுக்கும் வகையில் ரயில்வே நிா்வாகம் செயல்படுகிறது. புகழ்வாய்ந்த ரயில்வே பணிமனை செயல்பட்ட நாகபட்டினம் இப்போது செயலிழந்து கிடக்கிறது.

இந்தத் துயர நிலைக்கு தீா்வு காண, திருவாரூா், நாகபட்டினம் பகுதி பொதுமக்கள் ஒன்றுபட்டு திங்கள்கிழமை (நவ.28) ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனா். தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள மறியல் போராட்டத்தின் மீது தலையிட்டு தீா்வு காண முயற்சிக்காத தெற்கு ரயில்வே நிா்வாகத்தையும், ரயில்வே அமைச்சகத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT