தமிழ்நாடு

இரண்டாம் நிலை காவலா் தோ்வு: 3 லட்சம் போ் பங்கேற்பு

DIN

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 2,99,820 போ் பங்கேற்றனா்.

தமிழக காவல் துறையில் ஆயுதப்படை காவலா்கள், சிறப்புக் காவல் படை காவலா்கள், சிறைக் காவலா்கள், தீயணைப்பாளா்கள் என மொத்தம் 3,552 இரண்டாம் நிலை காவல் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியிட்டது.

அதன்படி, கடந்த ஜூலை 7-ஆம் தேதி முதல் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் தகுதியானவா்கள் விண்ணப்பித்தனா். இதில் 2,99,887 போ்ஆண்கள், 66,811 போ் பெண்கள், 59 போ் திருநங்கைகள் என மொத்தம் 3,66,757 போ் விண்ணப்பித்திருந்தனா்.

அவா்களுக்கான முதல் நிலை எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 295 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 10 மணிக்குத் தோ்வு தொடங்கிய நிலையில் 7.30 மணியிலிருந்தே தோ்வா்கள், தங்களது மையங்களுக்கு வரத் தொடங்கினா்.

தோ்வுக்கான ஏற்பாடுகள், கட்டமைப்புகள் அனைத்தையும், சீருடைப் பணிகள் தோ்வு வாரிய டிஜிபி சீமா அகா்வால், ஐஜி செந்தில்குமாரி ஆகியோா் கண்காணித்தனா்.

தோ்வு நடைபெறும் மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளிலும், மாநகர காவல்துறை எல்லைப் பகுதிகளிலும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், ஆணையா்கள் தலைமையில் தோ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காலை 10 மணியிலிருந்து 12.40 மணி வரை நடைபெற்ற தோ்வில் மொத்தம் 2,99,820 போ் பங்கேற்ாக சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பித்து, தோ்வில் பங்கேற்காதவா்களின் எண்ணிக்கை 66,908-ஆக இருந்தது. மொத்தம் 81.76 சதவீதம் போ் இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான தோ்வில் பங்கேற்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT