தமிழ்நாடு

நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வியாபாரிகளுக்குக் கடைகள்!

28th Nov 2022 07:25 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள விற்பனையாளர்களுக்கு மொத்தம் 127 மொபைல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன பெட்டிக்கடைகள் (கியோஸ்க்குகள்) வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சி மூலம், 1.05 கோடி ரூபாய் மதிப்பில், வெளிப்புற பெட்டிக்கடைகள் ஒதுக்கப்பட்டன.

தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, இன்று நடைபெற்ற விழாவில் 77 கடைகளை ஒதுக்கீடு செய்தார்.

ADVERTISEMENT

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் சாலை ஓரத்தில் கடைகள் வைத்திருக்குமாறு விற்பனையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே 50 பெட்டிக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT