தமிழ்நாடு

கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி

28th Nov 2022 05:02 PM

ADVERTISEMENT

கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது:

பேராசிரியர்களுக்கான கலந்தாய்வில் 580 பேர் இடமாற்றம் கோரி விண்ணப்பித்தள்ளனர். கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு நடைபெறும்.

மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: 'இது முடிவல்ல'.. 'ரோஜா' சீரியல் குறித்து பிரியங்கா நல்கார் உருக்கம்!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புகிறோம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT