தமிழ்நாடு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்!

28th Nov 2022 09:12 AM

ADVERTISEMENT

தமிழக முழுவதும் மின் பயனாளர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கு திங்கள்கிழமை (நவ.28) முதல் டிசம்பர் 31 ஆம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 

மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாள்கள், அரசு விடுமுறைக நாள்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

இதையும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?

சிறப்பு முகாம்களுக்குச் செல்வோர் தங்களது கைப்பேசி, அசல் ஆதார் அட்டை, மின் கட்டண அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

இதையும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டம் வரி செலுத்துவோரை பாதிக்கும்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT