தமிழ்நாடு

எறையூர் சிப்காட் தொழில் பூங்கா திறப்பு; ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

28th Nov 2022 01:54 PM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து, இத்தொழில் பூங்காவில் அமையவுள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, 

இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி

ADVERTISEMENT

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதரத்தை வலுவடையச் செய்து வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

இதையும் படிக்க.. ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் தரப்போவதில்லை: சொன்னது யார்?

தமிழ்நாடு அரசின் 2022-23-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதல்வரால் 23.8.2022 அன்று துறை சார்ந்த காலணிக் கொள்கை வெளியிடப்பட்டது. காலணிக் கொள்கையின் கீழ், காலணி உதிரி பாகங்களின் தொகுப்பு உற்பத்தி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க உயர்வு அடையாளம் காணப்பட்டு, அதில் கவனம் செலுத்தப்பட்டு, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காலணி உற்பத்தி செய்யும் தொகுப்பு தொழில் நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே முதல்வரால் இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் ஒரு காலணி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், எறையூர் இரண்டாவது காலணி பூங்காவாக இருக்கும்.

இதையும் படிக்க.. மகப்பேறு அறுவைச்சிகிச்சையில் வயிற்றுக்குள் மறந்துவிடப்பட்ட துண்டு

 இதன் தொடர்ச்சியாக, குறுகிய காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கான தனிக் கொள்கை வெளியிடப்பட்ட 23.8.2022 அன்று கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துடன் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. அதன் மூலம், 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.

இன்று தமிழக முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக ரூ.740 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 4,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. ஆக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.2,440 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 29,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவுள்ளது.

இந்த 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து, எதிர்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் தோல் அல்லாத காலணி மற்றும் அதன் தொகுப்பு தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.5,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதன் மூலமாக பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் உயர்நிலை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT