தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை: அமைச்சர் ரகுபதி

28th Nov 2022 01:28 PM

ADVERTISEMENT

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்துவிதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தவுடன் சட்டம் நடைமுறைக்கு வரும். 

ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம். ஆன்லைன் ரம்மி, நோய் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது.  ஆன்லைன் ரம்மியை உலக சுகாதார நிறுவனம் ஒரு வகையான நோய் என்றே கூறியுள்ளது. ஆன்லைன் ரம்மியால் இனி ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். 

இதையும் படிக்க- காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்

ADVERTISEMENT

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் மசோதாவின் முகப்புரையிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. ஆளுநர் ஏன் காலதாமதப்படுத்துகிறார் என்பது தெரியவில்லை. அதற்கான காரணம் ஆளுநருக்குத்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT