தமிழ்நாடு

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

28th Nov 2022 08:35 AM

ADVERTISEMENT

 

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,521 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை  மாலை வினாடிக்கு 12,347  கன அடியாக இருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 12,521 அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் திங்கள்கிழமை காலை 119.21அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 92.21 டி.எம்.சியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT