தமிழ்நாடு

'தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியானதுதான்' - கனிமொழி

28th Nov 2022 03:46 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு கடந்த செப்டம்பர் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

தொடர்ந்து கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் கோரியிருந்த நிலையில் தமிழக அரசு அதுகுறித்து விளக்கம் அளித்தது. எனினும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் காலாவதியாகிவிட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில்  தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யான கனிமொழி, 'ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்த பதவி இல்லையென்றால் இன்று ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும். எதை முதலில் செய்ய வேண்டும் என அவருக்குத் தெரிய வேண்டும்.  ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று. ஆளுநர் பதவி இல்லாவிட்டாலே இன்று பல சிக்கல்கல் தீர்ந்துவிடும். ஆன்லைன் ரம்மியைப் பாதுகாக்க எதற்காக இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை' என்றார்.

சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஒண்ணுமே புரியல! குஜராத்தில் ஒரேமாதிரி வாக்குறுதிகளை அளித்த கட்சிகள்!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT