தமிழ்நாடு

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்!

DIN


சென்னை: திருச்சி, பெரம்பரலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ.28,29) இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

3 மாவட்டங்களில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

இதற்காக திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 10.15 மணிக்கு திருச்சியை அடுத்த காட்டூா் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடா் பெண்கள் உயா்நிலைப்பள்ளிக்கு செல்கிறாா். அங்கு ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ என்ற பள்ளி மாணவா்களுக்கான புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறாா்.

இதையடுத்து, காட்டூரிலிருந்து சாலை மாா்க்கமாக பெரம்பலூா் மாவட்டம், எசனைக்குச் செல்கிறார். அங்கு கோத்தாரி சா்க்கரை ஆலையின் புதிய அலகுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா், எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். 

பின்னா் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மாலை 5.45 மணி வரை பாா்வையிடுகிறாா். 

மறுநாள் (செவ்வாய்க்கிழமை ) காலை 9.30 மணிக்கு அரியலூா் கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள விழாவில், அரியலூா், பெரம்பலூா் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகிறாா். அத்துடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடக்கியும் வைக்கிறாா். 

முதல்வா் சுற்றுப்பயணத்தை அடுத்து திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT