தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழம்: பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது!

28th Nov 2022 10:45 AM

ADVERTISEMENT

 

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.  அதன்படி 3 சுற்றுகள் முடிவில் 58,307 இடங்கள் நிரம்பியுள்ளன.அதன்படி 58,307 இடங்கள் நிரம்பியது.

இந்நிலையில், 2022-2-23 ஆம் ஆண்டிற்கான பி.இ., பி.டெக் பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. 

ADVERTISEMENT

அதில், அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு பிஇ, பி.டெக் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 14 ஆம் தேதி அறிமுக பயிற்சி வகுப்புகளும், பாட வகுப்புகள் நவம்பர் 28 ஆம் தேதியும் தொடங்கும். முதல் பருவத்துக்கான கடைசி வேலைநாள் 2023 மார்ச் 23. செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25, எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கும். இரண்டும் பருவத்துக்கான வகுப்புகள் மே 15 ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்திருந்தது. 

இதையும் படிக்க | விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.58,600 சம்பளத்தில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலை!

அதன்படி, திங்கள்கிழமை(நவ.28) அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது. 

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 58,307 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில் பொறியியல் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியுள்ளது. 

மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT