தமிழ்நாடு

இனம்தான் வேறு, தாய்மை ஒன்றுதான்: நாய்க்குட்டிக்கு தாயாக மாறி பாலூட்டும் குரங்கு

DIN

வேலூர்: இனம் வேறு என்றாலும் தாய்மை ஒன்று தான் என்பதை நிரூபித்துள்ளது குரங்கு ஒன்று. ஆதரவற்ற நாய்க்குட்டிக்கு தாயாக மாறி பாலுட்டி வளர்த்து வருகிறது இந்தக் குரங்கு. 

குரங்கு மற்றும் நாய்க்குட்டிக்கு இடையேயான பாச பினைப்பினைப் பார்ப்பவர்கள் நெகிழ்ச்சியடைகிறார்கள்.

வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியில் குரங்கு ஒன்று ஆதரவற்ற நாய்க்குட்டி அரவணைத்து வளர்த்து வருகிறது. இக்குரங்குக்குப் பிறந்த குட்டிகள் அனைத்தும் இறந்துவிட்டதாகவும், இதனால் சாலையில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நாய்க்குட்டி ஒன்றை அக்குரங்கு தனது குட்டியாகவே பாவித்து அரவணைத்து வளர்க்க தொடங்கியிருக்கிறது.

அதற்கு பாலூட்டி குரங்குக் குட்டியைப்  போன்று வயிற்றில் வைத்துக்கொண்டே யாரும் அதை நெருங்காதவாறு பாதுகாத்து வருகிறது. 

அதேபோல் அந்த நாய்க் குட்டியும் குரங்கிடமே பால் குடித்து மிகுந்த பாசத்தோடு வளர்ந்து வருகிறது. இக்குரங்கு அங்குள்ள பொது மக்களிடமும் பாசமாக பழகி வருகிறது. அவர்கள் இக்குரங்கிற்குத் தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர். 

இனம் வேறு என்றாலும் தாய்மை ஒன்றுதான் என்பதை உணர்த்தும் இக்குரங்கின் செயலையும், குரங்கு மற்றும் நாய் குட்டியின் அளவில்லா பாசப் பிணைப்பும் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT