தமிழ்நாடு

நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் வரும் 5-இல் டிடிவி தினகரன் அஞ்சலி

28th Nov 2022 12:35 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் வரும் டிச.5-ஆம் தேதியன்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்துகிறாா். இதுகுறித்து, அந்தக் கட்சி

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினம் வரும் டிச. 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அவருடைய நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தவுள்ளாா். மேலும், உறுதிமொழி ஏற்பும் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வில், கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் பங்கேற்க வேண்டுமென அமமுக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT