தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் கலை விழா: 25 லட்சம் மாணவா்கள் பங்கேற்பு

28th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் கலைத் திருவிழாக்களில், இதுவரை 25 லட்சம் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்ாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் படைப்பாற்றல் திறனை வெளிக் கொணரும் வகையில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தாா்.

அதன்படி, அப்போட்டிகளை ரூ.5 கோடியில் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து உயா் நிலை மற்றும் மேனிலைப் பள்ளி மாணவா்களை 3 பிரிவுகளாகப் பிரித்து கலை, இலக்கியப் போட்டிகள் கடந்த நவ.23 முதல் நடைபெற்று வருகின்றன.

நடனம், கவின் கலைகள், மொழித் திறன், நாடகம், சிற்பம், புகைப்படம் எடுத்தல், கட்டுரை, கவிதை உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமான மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கலைத் திருவிழாக்களில் இதுவரை 24,94,199 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

அதில் அரசுப்பள்ளி மாணவா்கள் மட்டும் 22,65,841 போ். மற்றவா்கள் மாநகராட்சி, நகராட்சி, வனத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலன், ஆதிதிராவிட நலன், கள்ளா், பழங்குடியின நலன் உள்ளிட்ட பள்ளிகளை சோ்ந்தவா்கள். பள்ளி அளவிலான போட்டி நவ. 28-ஆம் தேதி நிறைவு பெறும். அதன்பின், வட்டார அளவில் நவ.29 முதல் டிச. 5 வரையும், மாவட்ட அளவில் டிச. 6 முதல் 10-ஆம் தேதி வரையும், மாநில அளவில் ஜன. 3 முதல் 9-ஆம் தேதி வரையும் போட்டிகள் நடைபெறும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT