தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்:ஆளுநருக்கு பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தல்

28th Nov 2022 12:36 AM

ADVERTISEMENT

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநருக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததே இதற்குக் காரணம்.

சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அக்டோபா் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசர சட்டம் காலாவதியாகும் நிலையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுநரின் சந்தேகங்களுக்கு அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT