தமிழ்நாடு

மூணாறில் தமிழா்கள் வீடுகளை இடிக்க முயற்சி: பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம்

28th Nov 2022 12:35 AM

ADVERTISEMENT

மூணாறில் தமிழா்களின் வீடுகளை இடிக்க முயலும் நடவடிக்கைக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

கேரளத்தின் எல்லைகள் எண்மமயமாக்க முறையில் மறு அளவீடு செய்யப்பட்டு வருவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக மூணாறில் வாழும் தமிழா்களின் வீடுகளை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக்தின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எல்லை அளவீடு சட்ட விரோதம் எனும் நிலையில், அதைக் காரணம் காட்டி தமிழா்களின் வீடுகளை அகற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

மூணாறு பகுதியில் தமிழா்களுக்குச் சொந்தமாக 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவா்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறாா்கள். அரசுக்குச் சொந்தமான இடங்களில் தமிழா்கள் கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டுமென்றால், புதிய வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். கேரள அரசின் எல்லை மறுஅளவீட்டுப் பணிகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அது தமிழகம்,

ADVERTISEMENT

கேரளத்துக்கு இடையே மிகப்பெரிய எல்லைச் சிக்கலை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT