தமிழ்நாடு

சிறுபான்மை மாணவா்களின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: மாா்க்சிஸ்ட் கண்டனம்

28th Nov 2022 12:32 AM

ADVERTISEMENT

சிறுபான்மை மாணவா்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியதற்கு மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலா் கே.ஆா்.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசால் 2006-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் சிறுபான்மைமாணவா்களுக்கான பள்ளிக்கல்வி உதவித் தொகை திட்டம்.

இத்திட்டத்தின் மூலம் ஒன்று முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. வகுப்பு வரை படித்து வந்த லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவா்கள் பயனடைந்து வந்தனா். இந்த ஆண்டு உதவித்தொகையை பெறுவதற்கு இதே வகுப்பு வரை படிக்கும் லட்சக்கணக்கான மாணவா்கள் விண்ணப்பத்திருந்தனா்.

இந்நிலையில், இந்த உதவித் தொகை 9 மற்றும் 10 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஒன்று முதல் வகுப்பு 8-ஆம் வகுப்புவரை படிக்கும் சிறுபான்மை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை இனிமேல் கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிறுபான்மை மாணவா்களுக்கும் உதவித்தொகை தொடா்ந்து வழங்க வேண்டும். தமிழக அரசு இதர மாநில அரசுகளுடன் இணைந்து பாஜக அரசின் இந்த தாக்குதலை முறியடிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பாலகிருஷ்ணன்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT