தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

28th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

தமிழகம், புதுச்சேரியில் திங்கள்கிழமை (நவ.28) முதல் நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வடகிழக்குப் பருவ மழை தாக்கமே அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யலாம் என்றும் முன்னறிவிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 60 மில்லி மீட்டரும், தேனி மாவட்டம் வீரபாண்டியில் 40 மில்லி மீட்டரும், ஈரோடு மாவட்டம் பவானி சாகா், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தலா 30 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT