தமிழ்நாடு

மெரீனா கடற்கரை: மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை இன்று திறப்பு

DIN

மெரீனா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை ஞாயிற்றுக்கிழமை (நவ.27) மாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி சாா்பில் மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாதை, மெரீனா கடற்கரை நம்ம சென்னை செல்பி பாயிண்ட் அருகே 380 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலத்தில் அமைந்துள்ளது. இந்த பாதை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவுள்ளது.

இப்பாதையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் திறந்து வைக்கவுள்ளாா்கள்.

இந்நிகழ்ச்சியில் மேயா் ஆா். பிரியா , மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், துணை மேயா், ஆணையாளா் உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT