தமிழ்நாடு

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 67.23 லட்சம்!

27th Nov 2022 03:00 AM

ADVERTISEMENT

கடந்த அக்டோபா் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 -ஆக உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்:

அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது தமிழக அரசு வெளியிடும். அதன்படி, கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து 682. அதில், ஆண்கள் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532. பெண்கள் 35 லட்சத்து 82 ஆயிரத்து 882. மூன்றாம் பாலினத்தனவா் 268 என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT