தமிழ்நாடு

சபரிமலைக்கு இதுவரை ரூ.52.55 கோடி வருவாய்!

DIN



சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாள்களில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம் போா்டு தெரிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது, பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தை மாதப் பிறப்பு வரை மண்டல - மகர விளக்கு காலங்களில் ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து இரண்டு மாதங்களுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவார்கள். 

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. 

இந்நிலையில், இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  தற்போது கரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதாகவும், நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது, பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருவதால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், வருவாய் வசூலும் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து  தேவஸம் போா்டு அனந்த கோபன் கூறியதாவது: மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாள்களில் கனமழையைத் தாங்கிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மலை வரை மலையேறி கோயிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 5.29 லட்சம். பக்தர்கள் மூலம் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.9.92 கோடி வருவாய் கிடைத்தது. 

பிரசாதங்களான அப்பம் மூலம் ரூ.2.58 கோடியும், அரவணை மூலம் ரூ.23.57 கோடியும், காணிக்கையாக ரூ.12.73 கோடியும் கிடைத்துள்ளது. இந்த காலத்தில் கிடைக்கும் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விழாவை நடத்துவதற்கு செலவிடப்படுகிறது. 

மேலும், 51 லட்சம் கண்டெய்னர் அரவணை உள்பட பிரசாதம் தற்போது வாரியத்திடம் போதுமான அளவு இருப்பு உள்ளது, இது அடுத்த 20 நாள்களுக்கு போதுமானதாக இருக்கும். நாள்தோறும் சுமார் 2.5 லட்சம் கண்டெய்னர்களில் அரவணை விற்பனை செய்யப்படுகிறது.

வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். சன்னிதானத்திற்கு செல்லும் நான்கு பாதைகளும் திறக்கப்பட்டு, சாலக்காயம்-பம்பை சாலையில் மின்விளக்கு பற்றாக்குறை தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மலை உச்சிக்கு செல்லும் பிரதான மலையேற்றப் பாதையின் பராமரிப்புப் பணிகள் அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT