தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கு தளர்வு?

DIN

தனியார் மருத்துவமனைகளில் கரோனா கட்டாய பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடக்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தனியார் மருத்துவமனைகளில் கரோனா கட்டாய பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படும்.

வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமானப் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடர்ச்சியாக கரோனா பாதிப்பு இருந்தாலும், இந்தியாவில் பூஜ்ஜிய நிலையை நோக்கி செல்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகளுக்கு காப்பீட்டு பணம் சென்று சேர்வதில் சிக்கல் இல்லை. அனைத்து மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT