தமிழ்நாடு

இன்று காலாவதியாகிறது ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம்

DIN

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இன்றுடன் காலாவதியாக உள்ளது. 

செப்டம்பர் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

தொடர்ந்து கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நடந்த பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. பின்னர் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

ஆனால் சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இன்றுடன் காலாவதியாகிறது. சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT