தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் மாரத்தான் ஓட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

27th Nov 2022 12:09 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி, பொது சுகாதாரத் துறையினர் பங்கு பெறும் மராத்தான் ஓட்டப் பந்தயத்தை அமைச்சர் ஆர்.காந்தி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட பொது சுகாதார துறையின் சார்பில், பொது சுகாதாரத் துறையினர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்ட பந்தயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. 

இதையும் படிக்க: பொது சுகாதாரம் 100 ஆண்டுகள் நிறைவு: செய்யாற்றில் மினி மாரத்தான் போட்டி!

மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர். தொடர்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT