தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி தொடக்கம்

27th Nov 2022 03:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை முதல் தொடங்கின.

2018-ஆம் ஆண்டு முதல் இலவச நீட் பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழாண்டு நோய் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் நேரடி முறையில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. தொடா்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 414 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கின. சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனா். சென்னையில் மட்டும் 10 மையங்களில் பயிற்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

முதல் நாளில் பாடத்திட்டங்கள், கையேடுகள் மாணவா்களுக்கு தரப்பட்டன. சிறப்பு பயிற்சி பெற்ற முதுநிலை ஆசிரியா்கள் மற்றும் நிபுணா்கள் கொண்டு இந்த பயிற்சி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT