தமிழ்நாடு

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்: கதிர் ஆனந்த், தயாநிதி மாறனுக்கு பொறுப்பு

DIN

திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 2 அணிகளுக்கு மாநில நிர்வாகிகளை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன்படி அமைப்புச் சாரா ஓட்டுநர் அணித் தலைவராக கதிர் ஆனந்த் எம்.பியும், செயலாளராக டி.செங்குட்டுவன் முன்னாள் எம்எல்ஏவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமைப்புச் சாரா ஓட்டுநர் அணித் துணைச் செயலாளர்களாக முத்துராஜா எம்எல்ஏ, பணப்பட்டி கே.தினகரன் முன்னாள் எம்எல்ஏ, நாகர்கோவில் எம். சிவராஜ், பொன்னேரி ஏ.ஆர்.டி. உதயசூரியன், விஷ்ணு பிரபு கோவை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலர்களாக கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஈஸ்வரப்பன், பைந்தமிழ் பாரி, வே.நம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, அந்தியூர் ப.செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன், சுப.தங்கவேலன், எஸ்.எஸ்.பழனி
மாணிக்கம், கரூர் கேசி பழனிசாமி, கோவை மு.கண்ணப்பன், எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா, எவ வேலு, பொன் முத்துராமலிங்கம்,
ஜெகத்ரட்சகன், முபெ சாமிநாதன், எல்.மூக்கையா, திருச்செங்கோடு கந்தசாமி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, பெ.குழந்தைவேலு, குத்தாலும் பி.கல்யாணம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT