தமிழ்நாடு

சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

27th Nov 2022 09:14 PM

ADVERTISEMENT

சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி "Dream Come True" என்கிறார். ஆம்! பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது. சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம். உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க- புல்லட் ஓட்டி அசத்திய ராகுல் காந்தி(விடியோ)

சென்னை மாநகராட்சி சாா்பில் மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதை, மெரீனா கடற்கரை நம்ம சென்னை செல்பி பாயிண்ட் அருகே 380 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலத்தில் அமைந்துள்ளது. 

ADVERTISEMENT

இந்த பாதையை மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி இன்று திறந்து வைத்தார்.

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT