தமிழ்நாடு

திமுக துணை அமைப்புகளுக்கு புதிய நிா்வாகிகள் அறிவிப்பு

27th Nov 2022 04:30 AM

ADVERTISEMENT

திமுகவில் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்பட துணை அமைப்புகளுக்கான நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவ அணித் தலைவராக மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி என்.வி.என்.சோமு, செயலாளராக சட்டப் பேரவை உறுப்பினா் எழிலன் நாகநாதன், பொறியாளா் அணித் தலைவராக துரை கி.சரவணனும், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா, இணைச் செயலாளராக கோவை மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்.மகேந்திரன், சுற்றுச்சூழல் அணித் தலைவராக முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, அணியின்

செயலாளராக திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேய சிவசேனாபதி, அயலக அணித் தலைவராக மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, செயலாளராக மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT