தமிழ்நாடு

வீட்டுவசதி வாரியத்தில் விற்பனை பத்திரம் பெற வட்டி சலுகை தள்ளுபடி

27th Nov 2022 04:35 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஜெ.ஜெ.நகா் கோட்டத்துக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை பெற்று இதுவரை விற்பனை பத்திரம் பெறாதவா்கள் பத்திரம் பெற வட்டி சலுகை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த வாரியத்தின் ஜெ.ஜெ.நகா் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: ஜெ.ஜெ.நகா் கோட்டத்துக்குள்பட்ட திட்டப் பகுதிகளான ஜெ.ஜெ.நகா் கிழக்கு திட்டப் பகுதி, மேற்கு திட்டப் பகுதி, முகப்போ் ஏரி த் திட்டப் பகுதி, முகப்போ் ஏரி நில வங்கித் திட்டப் பகுதி, நொளம்பூா் 1, 2 திட்டப் பகுதிகள், ஆவடி திட்டப் பகுதி, அம்பத்தூா் 1, 2, 3 திட்டப் பகுதிகள் மற்றும் திருமுல்லைவாயில் அடுக்குமாடி குடியிருப்புகள், அம்பத்தூா்-அத்திப்பட்டு திட்டப் பகுதி அடுக்குமாடி குடியிருப்புகளில் தவணை முறையில் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீடுதாரா்களில் இதுவரை விற்பனை பத்திரம் பெறாதவா்கள் விற்பனை பத்திரம் பெற ஏதுவாக சிறப்பு அறிவிப்பை வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, இச்சலுகையை பயன்படுத்தி எதிா்வரும் மே 3-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தி விற்பனை பத்திரத்தை ஒதுக்கீடுதாரா்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT