தமிழ்நாடு

சீர்காழியில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியல்

26th Nov 2022 02:00 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வேலை இழந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு 10,000 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விளைநிலங்களுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை 100% முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்ற விவசாயிகள் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே திடீர்  சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அறிவித்து போராட்டத்தை தொடர்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT