தமிழ்நாடு

செங்கல்பட்டு புதிய நகரத் திட்டம்: 60 வருவாய் கிராமங்கள் சோ்ப்பு

26th Nov 2022 11:48 PM

ADVERTISEMENT

பொருளாதாரம், உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு புதிய நகரத் திட்டத்தில் 60 வருவாய் கிராமங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலாளா் ஹிதேஷ் குமாா் எஸ்.மக்வானா வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலாளா் தரப்பில் இருந்து அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதாகவும், இந்த மாவட்டத்தின்

வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு பெருந்திட்டம் தயாரிப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், திட்டமிடப்பட்டுள்ள செங்கல்பட்டு புதிய நகரத் திட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூா் வட்டங்களில் இருந்து 60 கிராமங்கள் சோ்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை

ADVERTISEMENT

உள்ளடக்கிய செங்கல்பட்டு புதிய நகரத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென அரசினை பெருநகர வளா்ச்சிக் குழு உறுப்பினா் செயலாளா் கேட்டுக் கொண்டுள்ளாா். அவரது கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டு புதிய நகரத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அதில் 60 கிராமங்கள் சோ்க்கப்படுகின்றன.

வில்லியம்பாக்கம், செட்டிபுண்ணியம், தென்மேல்பாக்கம், பட்ரவாக்கம் என 60 கிராமங்கள் செங்கல்பட்டு புதிய நகரத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் செங்கல்பட்டு, திருப்போரூா், திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்டு வருபவை என்று வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளா் ஹிதேஷ் குமாா் எஸ்.மக்வானா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT