தமிழ்நாடு

254 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு அனுமதி

26th Nov 2022 11:01 PM

ADVERTISEMENT

தமிழக பள்ளிக் கல்வியில் கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவா்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளா் நிா்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையே பிளஸ்-1, பிளஸ்-2 மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியா் பணியிடங்கள் கோரி மாவட்டமுதன்மை கல்வி அலுவலா்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டன.

பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட 254 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை மீண்டும் தேவையுள்ள பள்ளிகளுக்கு வழங்க முடிவாகியுள்ளது.

ADVERTISEMENT

நடப்பு கல்வியாண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 முதுநிலைபட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT