தமிழ்நாடு

கோயில் சொத்து வழக்கு:பெரம்பலூா் ஆட்சியருக்கு உத்தரவு

26th Nov 2022 10:46 PM

ADVERTISEMENT

கோயில் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலத்தைச் சோ்ந்த ஆ.ராதாகிருஷ்ணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பல சாமி, ஐயனாா் சுவாமி கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை ஆணையா் ஆகியோரிடம் புகாா் மனு அளித்தேன். அந்த புகாரை விசாரித்த ஆணையா், கோயில் சொத்துகளையும், நீா்நிலைகளையும் பாதுகாக்க அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். ஆனால், இதுவரை ஆட்சியா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா- நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் இவ்வழக்குத் தொடா்பாக பெரம்பலூா் ஆட்சியா் 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT