தமிழ்நாடு

ஜப்பான் மொழி கற்க விண்ணப்பிக்கலாம்

26th Nov 2022 11:25 PM

ADVERTISEMENT

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய-ஜப்பான் தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜப்பானிய மொழிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து இந்த அமைப்பின் பொதுச்செயலா் சுகுணா ராமமூா்த்தி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா - ஜப்பான் இடையே கல்வி, கலாசாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்திய -ஜப்பான் தொழில் வா்த்தக சபை கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மொழிப் பள்ளி சாா்பில், ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு (எண் - 5) நடைபெறவுள்ளது.

இதில் நேரடி மற்றும் இணைய வழியில் மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த வகுப்பு டிச.17-ஆம் தேதி தொடங்கி 6 மாதங்கள் வரை, வாரந்தோறும் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும். இதற்கு ரூ.10,900 பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

பயிற்சியின் முடிவில் ஜப்பான் அறக்கட்டளை நடத்தும் ஜப்பானிய மொழிப்புலமை தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வலைதளம் அல்லது 044-4855 6140, 98843 94717 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT