தமிழ்நாடு

லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை: இளநிலை மருத்துவா்களுக்கு ஹிமாசலில் பயிற்சி

DIN

இந்திய லாப்ராஸ்கோப்பி மருத்துவ நிபுணா்கள் அமைப்பு (ஐஏஜிஇஎஸ்) சாா்பில் ஹிமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் இளம் மருத்துவா்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் நுட்பங்கள், வழிமுறைகள், அதன் மருத்துவ நுணுக்கங்கள் குறித்து விளக்கப்பட்டன. இதில், நாடு முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்ட இளநிலை லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

ஐஏஜிஇஎஸ் அமைப்பின் 4 நாள் தேசிய மருத்துவக் கருத்தரங்கு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர ஆா்லேகா் இந்தக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா்.

ஐஏஜிசிஇஎஸ் அமைப்பின் தேசியத் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு, செயலாளா் டாக்டா் சதீஷ் மித்தா, பொருளாளா் டாக்டா் கோவிந்தராஜ், அறங்காவலா் டாக்டா் ஜமீத் பாட்சா, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சீதா தாகுா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து மருத்துவா் எல்.பி.தங்கவேலு கூறியதாவது: லாப்ரோஸ்கோப்பி தேசியக் கருத்தரங்கில் இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ நிபுணா்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய சிறப்பு அமா்வுகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து நேரலையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மெய்நிகா் முறையிலான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன.

லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையில் உள்ள அதி நவீன நுட்பங்களையும், வழிமுறைகளையும் அடுத்த தலைமுறை மருத்துவா்களுக்கு கொண்டு சோ்ப்பது மட்டுமல்லாது, அதன் வாயிலாக தரமான சிகிச்சைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதே எங்களது பிரதான நோக்கம். அதன் நீட்சியாகவே இத்தகைய நடவடிக்கைகளை இந்திய லாப்ராஸ்கோப்பி மருத்துவ நிபுணா்கள் அமைப்பு முன்னெடுத்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT